தமிழ் SUPER HERO-வாக கலக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி... ரசிகர்கள் எதிர்பார்த்த வீரன் பட ட்ரெய்லர் எப்போது? மாஸான அறிவிப்பு இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு,Hiphop tamizha adhi in veeran movie trailer release date announcement | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் சூப்பர் ஹீரோ கதையாக வெளிவரவருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தமிழ்நாட்டில் குறிப்பாக 2K கிட்ஸ் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட். இவரது பாடல்களும் சரி படங்களும் சரி, பள்ளி & கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளை மிக அதிக அளவில் கவர்வதால் ட்ரெண்டிங் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அந்த வகையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படமான அன்பறிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அன்பறிவு திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக  Disney+ Hotstar தளத்தில் ரிலீஸானது. 

இந்த வரிசையில் ஹிப் ஹாப் தமிழா அதன் நடிப்பில் அடுத்த புதிய திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் PT Sir. சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தயாராகி வரும் PT Sir திரைப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்த இரண்டாவது திரைப்படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இதுவரை ஹிப் ஹாப் தமிழா ஆதியின் திரைப்படங்களுக்கு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகியுள்ள வீரன் திரைப்படம் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தை போல ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ARK.சரவண் இயக்கத்தில் வீரன் திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள வீரன் திரைப்படத்திற்கு தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரிலீசுக்கு தயார்படுத்தும் வகையில் வீரன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற மே 20 ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

Get ready to experience the most awaited #Veeran Trailer striking from 20th MAY ⚡🥁

In Theatres from JUNE 02nd #VeeranTrailerOnMAY20@hiphoptamizha @ArkSaravan_Dir @VinayRai1809 @editor_prasanna @deepakdmenon @kaaliactor @saregamasouth @SakthiFilmFctry pic.twitter.com/DtTLcYnf95

— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 17, 2023

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!
சினிமா

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!
சினிமா

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!

சினிமா

"ரொம்ப வருத்தி எடுத்துருச்சு!"- மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் கடினமான அனுபவங்களை பகிர்ந்த தியாகராஜன் குமரராஜா! வைரல் வீடியோ