'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!

ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது குறித்து பதிவிட்ட சமந்தா,samantha shared a photo in instagram status about her shoot of citadel | Galatta

இந்திய அளவில் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகை சமந்தா தொடர்ந்து தரமான கதை களங்களையும் பல விதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி நடிகை சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் சாகுந்தலம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. PAN INDIA படமாக பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. இருப்பினும் சமந்தா நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நடிகை சமந்தா நடிப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் சென்னை ஸ்டோரி எனும் படம் தயாராகிறது. பிரபலமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் நாவலை தழுவி ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில்  சமந்தா கதையின் நாயகியாக நடிக்கிறார். அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகி வரும் குஷி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் சமந்தா.  அழகான ரொமான்டிக் காமெடி படமாக தயாராகி இருக்கும் குஷி திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சமந்தா நடிப்பில் அதிரடி சயின்ஸ் பிக்சன் ஆக்சன் வெப் சீரிஸாக தயாராகி வருகிறது சைட்டாடெல். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் - 2 வெப் சீரிஸில் அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகை சமந்தா தற்போது மீண்டும் இவர்களோடு புதிய வெப்சீரிஸில் இணைந்திருக்கிறார். அவெஞ்சர்ஸ் எண்டு கேம் & தி க்ரே மேன் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்களின் ஹாலிவுட் வெப் சீரிஸான சைட்டாடெல் வெப் சீரிஸில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸின் இந்திய வெர்ஷனாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவர இருக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் ரத்தம் கட்டிய அல்லது சிராய்ப்பு ஏற்ப்பட்டது போன்ற நிலையில் இருக்கும் கையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “My Love Story with Action” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த காயங்கள் சைட்டாடெல் வெப் சீரிஸின் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த போது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளி வருகின்றன. "என் ஆக்ஷன் கலந்த காதல் கதை" என எனக் குறிப்பிட்டு நடிப்பின் மீதான தனது வேட்கையை பிரதிபலிக்கும் விதமாக சமந்தா பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்தப் புகைப்படம் இதோ…
thiagarajan kumararaja about restrictions in amazon prime video

சினிமா

"3வது படத்திற்கு ரசிகர்கள் காத்திருக்க மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ் தொடங்கியது எப்படி?"- தியாகராஜன் குமாரராஜாவின் பதில் இதோ

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ
சினிமா

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த ஸ்பெஷல்... மனதை மயக்கும் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த ஸ்பெஷல்... மனதை மயக்கும் அட்டகாசமான GLIMPSE இதோ!