ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட கல்லூரும் பூவே பாடல் வெளியீடு,vijay antony in pichaikkaran 2 movie kallurum poove song out now | Galatta

தனது முதல் PAN INDIA படமாக எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவர இருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து புதிய சர்ப்ரைஸ் ஒன்றை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தனக்கே உரித்தான ஸ்டைலில் பல அட்டகாசமான பாடல்கள் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை வென்ற விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நான் திரைப்படத்திலிருந்து நடிகராகவும் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

அந்த வகையில், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள், இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் வரிசையாக வெளிவர உள்ளன. 

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த விஜய் ஆண்டனி முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்த படம் பிச்சைக்காரன் 2. இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.  விஜய் ஆண்டனி முதல் முறை இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது திடீரென படகு விபத்தில் பலத்த காயமடைந்தார். முகத்தில் மட்டும் பல்வேறு எலும்பு முறிவுகளும் மோசமான காயங்களும் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருக்கிறார். 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில், காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள  பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்து விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து அடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸாக கல்லூரும் பூவே பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அனைத்து ஆடியோ தலங்களிலும் இந்த பாடல் தற்போது ஒலிப்பதாக விஜய் ஆண்டனி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

Listen to Kalloorum Poove | Mandhara Puvva from #Pichaikkaran2 | #Bichagadu2 on all audio streaming platforms 😊

Releasing worldwide on May 19#BLOCKBUSTER pic.twitter.com/AsmVrXeTFK

— vijayantony (@vijayantony) May 17, 2023

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!

சினிமா

"3வது படத்திற்கு ரசிகர்கள் காத்திருக்க மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ் தொடங்கியது எப்படி?"- தியாகராஜன் குமாரராஜாவின் பதில் இதோ

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ
சினிமா

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ