உலக அளவில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி முறையாக தமிழில் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

முழுக்க முழுக்க சமையலை மையப்படுத்திய சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மாஸ்டர் செஃப் தமிழ் முதல் சீசனில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவகி விஜயராமன் டைட்டிலை தட்டிச்சென்றதோடு 25 லட்ச ரூபாய் பரிசையும் Golden Chef Coat-ம் வென்றார்.

செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் கௌஷிக் ஷங்கர் மற்றும் செஃப் ஹரிஷ் ராவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக விளங்கினர். இந்நிலையில் மாஸ்டர் செஃப் தமிழ் முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத், "மாஸ்டர் செஃப் தமிழ் 1 நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் 2-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. 2-வது  சீசனின் போட்டியாளர்களுக்கான தேர்வுகள் இன்று ஆரம்பமாகின்றன" என தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் மாஸ்டர் செஃப் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் செஃப் தமிழ் 2 அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ...