கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள், கடைகள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

vaccineஉலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் கொரோனா  வைரஸ் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மெகா  தடுப்பூசி முகாம் மூலம் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தபட்டு வருகின்றன. வாரம் ஒருமுறை நடந்து வந்த மெகா  தடுப்பூசி முகாம் தற்போது வாரத்திற்கு இரு முறை நடத்தப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார் .


இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதார சட்ட ஆணையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம்  பேசி கூடுதல் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மழை வெள்ள காலத்திலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. 

தொடர் தடுப்பூசி முகாம் காரணமாகவும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாகவும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 800-க்குள் அடங்கி விட்டது இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட ஆணை பின்வருமாறு:- பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.

மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.திரையரங்குகள், இதர பொழுது போக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்களில் தடுப்பூசி உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.