அதானிக்கு சொந்தமான குஜராத் துறைமுகத்தில் மிகவுமு் ஆபத்தான கதிரியக்க பொருட்கள் கொண்டு சென்ற கன்டெய்னர்கள் சிக்கி உள்ளன.  

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் ஒன்று உள்ளது. இந்த முந்த்ரா துறைமுகத்தில் தான், வந்து நிற்கும் கப்பல் ஒன்றில் பாகிஸ்தான் மற்றும் சீனா நாட்டிற்கு சொந்தமான கன்டெய்னர் ஒன்று இருப்பதாகவும், அந்த கன்டெய்னரில் மிகவும் ஆபத்தான கதிரியக்க பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுப்படித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக  அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால், “பறிமுதல் செய்யப்பட்ட இந்த கன்டெய்னர்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனா நாட்டில் உள்ள ஷாங்காய்க்கு அனுப்பப்படுகிறது” என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், “இவை முத்ரா துறைமுகத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும், இந்த சரக்குகள் அபாயமற்ற வகையாக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்து பார்த்த போது, இது மிகவும் அபாயகரமான பொருள் என்பது தெரிய வந்ததாகவும்” அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர்களில் கதிரியக்கப் பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டும் அபாயகரமான வகை 7 கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும்” அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

அதாவது, “கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 ஆம் தேதி அன்று முந்த்ரா துறைமுகத்தில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சுங்க மற்றும் DRI இன் கூட்டுக் குழு, பல கன்டெய்னர்களை கைப்பற்றியது. 

இந்த கன்டெய்னர்கள் மிகவும் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கன்டெய்னர்கள் இந்தியாவின் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் பரிசோதனைக்காகவே இறக்கி வைத்தோம்” என்றும், அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் எந்த ஒரு செயலுக்கும் தொடர்ந்து முழுமையாக உதவுவோம் என்றும், அதானி குழுமம் தேசிய பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும், அதை எந்த வகையிலும் சமரசம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றும், அதானி போர்ட்டின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்னர்.

இதனிடையே, குஜராத்தில் அதானிக்கு சொந்தமான இந்த துறைமுகம் தான், தற்போது இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகமாக இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்கள் முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் எடையுள்ள, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் இதே துறைகத்தில் இருந்து தான் அதிகாரிகள் பிறமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.