100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவும் சன் பிக்சர்ஸ்... ரஜினிகாந்தின் ஜெயிலர் பட வெற்றி கொண்டாட்டம்! குவியும் பாராட்டுகள்

ஜெயிலர் பட வெற்றி 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவும் சன் பிக்சர்ஸ்,Sun pictures donated 1 crore to for 100 children heart surgery | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 100 குழந்தைகளின் இருதயமா அறுவை சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் தனது திரை பயணத்தில் 47 ஆண்டுகளைக் கடந்தும் இடைவிடாது தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. ஆரம்ப முதலே ரிப்பீட் மோடில் ரசிகர்கள் கொண்டாடிய ஜெயிலர் திரைப்படம் இரண்டு வார இறுதியில் 525 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக சாதனை படைத்தது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ளது.

முன்னதாக இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை பரிசளித்த கலாநிதி மாறன் அவர்கள் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு PORSCHE காரை பரிசளித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் 100 வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் இறுதி அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் செய்திருக்கும் இந்த செயல் தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் திருமதி.காவேரி கலாநிதி மாறன் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் பிரதாப் ரெட்டியிடம் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கிய புகைப்படம் இதோ…
 

On behalf of Sun Pictures, Mrs. Kavery Kalanithi handed over a cheque for Rs.1 Crore to Dr. Prathap Reddy, Chairman, Apollo Hospitals, towards heart surgery for 100 under privileged children.
#Jailer #JailerSuccessCelebrations pic.twitter.com/o5mgDe1IWU

— Sun Pictures (@sunpictures) September 5, 2023