'சந்திரமுகி படத்தில் எதுவுமே செய்யாத 30அடி நீள பாம்பு எதற்கு?' 'பார்ட் 2வில் வருமா?'- இயக்குனர் Pவாசுவின் அசத்தலான பதில் இதோ

சந்திரமுகி படத்தில் உள்ள பாம்பு குறித்து இயக்குனர் Pவாசு பதில்,director p vasu replies to why snake in chandramukhi movie | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி இருக்கிறது. இயக்குனர் P.வாசு அவர்களின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கணா ராணாவத் இணைந்து நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா ப்ரொடகஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் P.வாசு அவர்கள் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசும் போது,

“சந்திரமுகி 1 படத்தில் பார்க்கும்போது இப்போது கூட பல பேர் விளையாட்டாக கேட்பார்கள் ஏதேதோ செய்தார்கள் ஆனால் அந்த சந்திரமுகியின் அறையில் அவ்ளோ பெரிய ஒரு பாம்பு இருந்தது அது என்னதான் செய்தது அது யாரையும் விழுங்கவும் இல்லை யாரையும் கொத்தவும் இல்லை அது யாருக்கு பாதுகாப்பாக இருந்தது என்றும் தெரியவில்லை கடைசியில் போய்விட்டது.. என்பார்கள் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?” எனக் கேட்டபோது, “பொக்கிஷங்கள் இருக்கிற இடங்களில் எல்லாம் பாம்புகள் இருக்கும் சந்திரமுகி என்ற ஒரு பெரிய பொக்கிஷம் அங்கு இருக்கிறது அவளுடைய நகைகள் எல்லாம் கொண்ட ஒரு பொக்கிஷங்கள் அங்கு இருக்கிறது. நீங்கள் பத்மநாபன் கோவில் பற்றிய அறிந்திருப்பீர்கள் பல வருடங்களுக்கு முன்பு பூட்டப்பட்ட ஒரு இடம் யாருக்குமே தெரியாது அங்கே நான்கு அறைகளோ 5 அறைகளோ இருக்கிறது அதை கடைசியில் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கும்போது கோடி கோடி கணக்கில் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் உள்ள நிறைந்து இருக்கின்றன அங்கெல்லாம் பாம்பு எப்படி சென்றது. யார் அனுப்பி வைத்தார்கள் பாம்பை அங்கே? எனவே பொக்கிஷங்கள் இருக்கக்கூடிய இடங்களில் பாம்புகள் இருக்கும் என்பது நம்முடன் டிஸ்கஷனுக்கு வரக்கூடிய எழுத்தாளர்கள் சொல்வார்கள். நான் கொஞ்சம் சீனியர் எழுத்தாளர்களிடம் கேட்பேன். கலைஞானம் ஐயா மாதிரியான நாட்களிடம் கேட்பேன் அவர்கள் சொல்வார்கள் இந்த மாதிரி பொக்கிஷங்கள் இருக்கக்கூடிய இடங்களில் பாம்புகள் இருக்கும் என சொல்வார்கள் அதனால் அதை வைத்தோம் அதே மாதிரி பாம்பு வைத்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் ரஜினி சார். ரஜினி சார் அவரது மனதில் யோசித்து ஒரு பாம்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். பாம்பு என்ன செய்யும் அது ஒரு பாதுகாப்பாக இருக்கும்” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “ஆனால் படத்தில் யாருமே அந்த பாம்பை பார்த்திருக்க மாட்டார்கள் அதை எப்படி வைத்தீர்கள் படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம் பேசிக் கொள்ளும் உள்ளே ஒரு பெரிய பாம்பு இருக்கிறது 30 அடியில் ஒரு பெரிய பாம்பு இருக்கிறது என்று சொல்வார்கள் ஆனால் கதாபாத்திரங்கள் யாருமே பார்த்ததில்லை.. அதை எப்படி முடிவெடுத்தீர்கள்?” என கேட்டபோது, “எனக்கு அதுதான் தேவை அதை பார்வையாளர்கள் தான் பார்க்க வேண்டும் எனக்கு அதுதான் வேண்டும் எனக்கு அதை பார்வையாளர்கள் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று இருந்தேன். ஒருவேளை இரண்டாவது பாகத்தில் இந்த பாம்பு மீண்டும் வரலாம். ஒரு பேட்டியில் கூட நகைச்சுவையாக சொல்லி இருந்தேன். அந்த பாம்பு என்ன பண்ணும் என்று கேட்டார்கள், பாம்பு என்ன ரா ரா என்று பாடுமா இல்லை பெட்ஷீட் போர்த்திக்கொண்டு படுத்துக்கொள்ளுமா பாம்பு வரும் பாம்பு போகும் பாம்பு என்ன செய்யப் போகிறது நாம் தொட்டு அதை சீண்டினால் மட்டுமே பாம்பு திரும்பி வருமே தவிர பாம்பு யாரையும் ஒன்றுமே செய்யாது அது அவ்வளவுதான்” என பதில் அளித்து இருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருக்கும் இயக்குனர் P.வாசு அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.