தமிழ் திரை உலகின் நட்சத்திர நாயகனாகவும் ஆகச்சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகும் #சூர்யா42 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு #சூர்யா42 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்து வரும் சூர்யா தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படத்தை CAPE OF GOOD FILMS, ABUNDANTIA ENTERTAINMENT ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சூரரைப்போற்று போலவே சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படமும் நேரடியாக OTT தளத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெப்சீரிஸ் போன்று எபிசோடுகளாக வெளியாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இதனைபடுத்து இதற்கு பதில் அளித்துள்ள ABUNDANTIA ENTERTAINMENT நிறுவனம், "இது முழுக்க முழுக்க தவறான செய்தி…எங்களது திரைப்படம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது… திரையரங்கில் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டு வருகிறோம்… தயவு செய்து நீங்கள் வெளியிடும் செய்திகளை தீரவிசாரித்து வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளது.
 

Hello @BOWorldwide, unfortunately your #Exclusive is #False. There is NO truth to this at all. Our film is under production and lining up for a big screen release. Request you to verify what you put out! @vikramix @rajsekarpandian @2D_ENTPVTLTD https://t.co/JJXoxeH5LS

— Abundantia (@Abundantia_Ent) August 28, 2022