படத்திற்கு படம் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அஞ்சலி கடைசியாக கன்னடத்தில் நடிகர் சிவ ராஜ்குமார் கதாநாயகனாக நடித்த பைராஜி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். முன்னதாக வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி தெலுங்கில் நடித்துள்ள வெப்சீரிஸ் ஜான்சி.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜான்சி வெப்சீரிஸில் அஞ்சலி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா தனது ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரித்துள்ள ஜான்சி வெப்சீரிஸுக்கு ஸ்ரீசரண் பகலா இசையமைத்துள்ளார்.

விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜான்சி வெப்சீரிஸ் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் அஞ்சலியின் ஜான்சி வெப்சீரிஸின் முதல் GLIMPSE வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஜான்சி வெப்சீரிஸ் GLIMPSE வீடியோ இதோ…