மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். தனது இரண்டாவது படமாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக சென்னையில் 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிய மலையாள திரைப்படம் என்றும் சாதனை படைத்தது பிரேமம். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஃபகத் பாசில் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் பாட்டு திரைப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்குவதாக அறிவித்தார்.

விரைவில் பாட்டு திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் எனவும் சமீபத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். இதனிடையே இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் மட்டும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்டு திரைப்படம் வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

ப்ரித்விராஜ் & நயன்தாராவுடன் இணைந்து அஜ்மல், கிருஷ்ணா சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், ரோஷன் மேத்யூ, மல்லிகா சுகுமாரன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள கோல்ட் படத்தை பிரித்விராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஆனந்த் சந்திரன்-விஸ்வஜித் ஒடுக்கத்தில் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள கோல்ட் படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, அல்போன்ஸ் புத்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் கோல்ட் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியானது.  அந்த புதிய போஸ்டர் இதோ…
 

#GOLD NEW POSTER pic.twitter.com/jdr0EFudyw

— Subbiah Shanmugham (@subbiahshan) August 28, 2022