தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2. விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. மீண்டும் காவல் துறை அதிகாரியாக லத்தி படத்தில் நடித்திருக்கும் விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் லத்தி திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது.இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 29-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் லத்தி படக்குழுவினர் லத்தி திரைப்படத்தின் SPECIAL GLIMPSE வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த SPECIAL வீடியோ இதோ…