இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஆகச் சிறந்த திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தில் முதன்முறையாக சீயான் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார். கே.ஜி.எஃப்-ஐ கதை களமாக கொண்டு 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதனிடையே தனது வழக்கமான படக்குழுவுடன் இல்லாமல் முழுக்க முழுக்க புதிய அணியுடன் இணைந்து இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கிய திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் மிக அழுத்தமான அரசியல் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக நட்சத்திரம் நகர்கிறது உருவாகியுள்ளது.

கட்டாயமாக ஆரோக்கியமான பல விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளள்ளார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் மும்பையில் முன்னணி இயக்குனர்களுக்கு பிரத்தியேகமாக நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையிட்டார்.திரைப்படத்தை பார்த்து ரசித்த இயக்குனர்கள் அனைவரும் பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் நெகிழ்ச்சியில் இயக்குனர் ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

Dir @anuragkashyap72 hugged #PaRanjith & praised him after watching #NatchathiramNagargiradhu in Mumbai

Crew is excited by the shower of congratulations from celebrities@beemji @nanditadas @Tisaditi@ghaywan @kalidas700 @KalaiActor @officialdushara @Manojjahson @YaazhiFilms_ pic.twitter.com/VJLl2qQefM

— Guna (@pro_guna) August 29, 2022