தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.மக்கள் தங்கள் ஓட்டுக்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.

மக்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக வாக்காளர்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகாரணங்களோடு வந்து வாக்களித்து வருகின்றனர்.

திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பூத்தில் பதிவு செய்துள்ளார்.

தனது மனைவி ஆர்த்தியுடன் காலையிலேயே வந்து மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.