பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் நடிகை ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்துள்ள MY3 வெப் சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாக உள்ள நிலையில், இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடித்து வந்த ஃபேண்டசி திரைப்படமாக தயாராகும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

மேலும் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் ரவுடிபேபி திரைப்படத்தில் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார். இதனிடையே ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் UR.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சிலம்பரசன்.TR மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார்.ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் OTT (DIGITAL) உரிமத்தை ஆஹா தமிழ் (aha tamil) நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

'மஹா' திரைப்படம் Mega hit அடைய ஆஹாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Happy to have bagged the digital rights for #Maha.#aha100PercentTamil #ahaThattunaTamilMattume #Hansika50th #STR pic.twitter.com/LiTyBeWxWp

— aha Tamil (@ahatamil) July 9, 2022