தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ்  வெப்சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீசாக உள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிசை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஆக்சன் ப்ளாக் திரைப்படங்களாக உருவாகியுள்ள அக்னிச் சிறகுகள், பார்டர், சினம் மற்றும் பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டான யானை திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கடந்த வாரம் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தற்போது யானை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோ இதோ…