சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,அக்ஷயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ஆதரவோடு அமோக வரவேற்பை பெற்று சன் டிவியின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றாக அசத்தி வருகிறது.

சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளியாக அசத்திய அக்ஷயா இந்த தொடரில் வில்லியாக நடித்து அசத்தி வருகிறார்.பல திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை படைத்துள்ளது.

செம விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் தற்போது ஒரு சூப்பர் விஷயம் நடைபெற்றுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரியங்கா வரும் இரட்டை வேடங்களில் இனி தோன்றுவார் என்று தெரிகிறது.இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.இதற்கு பின் சீரியல் எப்படி போக போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.