தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன்.நடிப்பு,டான்ஸ்,இயக்குனர்,பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,பாடகர் என சினிமாவின் அனைத்து பரிமாணங்களையும் அறிந்த பன்முகக்கலைஞராக திகழ்பவர் சிம்பு.இளம் வயதிலேயே பெரும் புகழையும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் சிம்பு பெற்றிருந்தார்.

எவ்வளவு புகழ் வந்ததோ அதே அளவு சர்ச்சைகளை சந்தித்த ஒரே நடிகர் சிம்பு மட்டும்தான்.இடையில் சில காரணங்களால் ஒரு படத்தின் ஷூடிட்ங்கிற்கு சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பித்து Redcard பல குற்றச்சாட்டுகளை சிம்பு மீது சுமத்தி வந்தனர்.சிம்புவும் அதற்கு ஏற்றார் போல உடலெடை கூடியது என்று இருக்க அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

அவ்வளவு தான் சிம்பு என்று பலரும் பேசி வந்த வேளையில் விமர்சனங்களை உடைத்தெறிந்து ரசிகர்கள் காட்டிய அன்பிற்காக மீண்டு புது அவதாரத்தில் வந்தார் சிம்பு.சில காரணங்களால் இடையில் சில சலசலப்புகளை சந்திக்க நேர்ந்தது என்றும் இனி அப்படி ஒருபோதும் இருக்காது என்றும் சிம்பு வாக்குறுதி அளித்தார்.அதேபோல ஈஸ்வரன்,மாநாடு என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு,பத்துதல உள்ளிட்ட படஙக்ளில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள மாநாடு படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு பிரம்மாண்ட விழா ஒன்றை இன்று சென்னையில் படக்குழுவினர் நடத்தினர்.இதில் பேசிய சிம்பு,அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.

பல பிரச்சனைகளை கடந்து வந்ததாக பேசிய சிம்பு.சற்று எமோஷனல் ஆகி மேடையிலேயே கண்கலங்கினார்,பிரச்சனைகளை நான் பார்த்துக்குறேன் என்னை நீங்க பார்த்துக்கோங்க என்று ரசிகர்களிடம் சிம்பு உருக்கமாக பேசியுள்ளார்.அத்துடன் தனது உரையை முடித்துக்கொண்டார்.