இந்திய திரையுலகின் சிறந்த நடன இயக்குனராக, மெகா ஹிட் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுக்கும் சக்சஸ்ஃபுல் கமர்சியல் இயக்குனராக, முன்னணி நட்சத்திர நடிகராக என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்த வருபவர் பிரபுதேவா.

அடுத்ததாக நடிகர் பிரபுதேவா முதல்முறை காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பொன்மாணிக்கவேல் திரைப்படம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகிறது. மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக பிரபுதேவா மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேள் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரைலர் தற்போது வெளியானது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில், K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ள தேள் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து சம்யுக்தா, ஈஸ்வரி ராவ்,யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் தேள் திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் இதோ...