பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த தில் சே (உயிரே) திரைப்படத்தின் மூலம் நான் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தியில் பல முன்னணி நட்சத்திர நடிகர்களோடும் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் நடிகையாக மட்டுமல்லாமல் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் நிறுவனராகவும் இருக்கும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஜீன் குட்எனாஃப்-ஐ அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா-ஜீன் குட்எனாஃப் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாடகை தாய் மூலமாக குழந்தைகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், மிகவும் மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்... நானும் எனது கணவர் ஜீனியும் அளவற்ற சந்தோஷத்தில் எங்களின் இரட்டை குழந்தைகள் ஜெய் ஜிந்தா குட்எனாஃப் & ஜியா ஜிந்தா குட்எனாஃப் இருவரையும் எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்” தெரிவித்துள்ளார்.