தனக்கென தனி ஸ்டைலில் நடித்து பல கோடி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக டங்கி திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி டன்கி திரைப்படத்தை இயக்குகிறார்.

முன்னதாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாம் இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். 

ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு(2023) ஜூன் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டரில் #AskSRK என்ற HASHTAGல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷாருக்கான், “விஜய் சேதுபதி” குறித்து எழுப்பிய கேள்விக்கு AWESOME and AWESOME என பதில் அளித்துள்ளது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த பதிவு இதோ…
 

Awesome and awesome!! https://t.co/rpKSjz5PpY

— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023