இந்த 2023ம் ஆண்டின் தொடக்கமே ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. தமிழ் திரை உலகின் மிகப்பெரிய ஆளுமைகளாக தங்களுக்கென்ன மிகப்பெரிய ரசிகர்கள் சாமராஜ்யத்தை கொண்ட நட்சத்திர நாயகர்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் இருவரின் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகின்றன.

கடைசியாக அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த அதிரடி படமாக துணிவு திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேற்கொண்ட பார்வை & வலிமை படங்களைத் தொடர்ந்து இயக்குனர் H.வினோத்துடன் அஜித்குமார் இணைந்து இருப்பது இது மூன்றாவது முறை.

அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்ற, நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையலைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படம் வருகிற 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த அறிவிப்பு இதோ…

 

#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal💥#ThunivuFromJan11 #ThunivuPongal#Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures pic.twitter.com/MzNw7eJJaP

— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023