தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகரான விஜய் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் இணைந்து உருவாகிருக்கும் வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது

இப்படத்தில்  தளபதி விஜய் உடன் கதாநாயகி ரஷ்மிகா மந்தனா , குஷ்பு , சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீ காந்த் மேகா,சங்கீதா, ஷ்யாம்,சுமன், யோகி பாபு, விடிவி கணேஷ், ஸ்ரீமன்  என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்துள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையில் ஏற்கனவே ஐந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விஜய் குரலில் ரஞ்சிதமே 122 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது. மற்றும் நடிகர் சிலம்பரசன் குரலில் தீ தளபதி அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா புத்தாண்டு அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகர் விஜய் பேசிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டிங்கில் போய் கொண்டிருக்கின்றன.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தில் ராஜு தாயரித்துள்ள வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் வசனம் விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷன், குடும்ப உணர்வுகளை கொண்டு ஆக்ஷன், ஆட்டம் பாட்டம் என பண்டிகை நாளுக்கு ஏற்ற கமர்ஷியல் எளிமேன்ட்டுகளுடன் உருவாகியுள்ளது வாரிசு திரைப்படம். 2 மணி நேரம் 49 நிமிடம் நீளம் கொண்ட படத்திற்கு   தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது. பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகவிருக்கும் வாரிசு திரைப்படம்  ஜனவரி 12 ஆம் தேதி உலகெங்கிலும் பிரமாண்டமாக வெளியாகவிருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

டிரைலரில், பல நிறுவனங்களின் உரிமையாளராகவும் மிகப்பெரிய கோடீஸ்வரராக சரத்குமார் தன் மகன் அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றாக  கூட்டு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். தந்தையின் பிசினசை பார்த்து கொள்ளும் மகன்களாக மூத்த மகன் ஸ்ரீகாந்த் மேகா மற்றும் நடுமகன் ஷ்யாம். இதனிடையே சரத்குமார் பிசினசில் எதிரிகள் உருவாகிறது. இது குறித்தும் தன் குடும்பத்தின் நிலவி வரும் பிரச்சனை குறித்தும் தெரியாமல் யாரும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்வை வாழ்ந்து வரும் இளைய மகனாய் வருகிறார் விஜய்.

இதனிடையே சரத்குமாருக்கும் அவரது பிஸினஸ் க்கும் ஏதோ பிரச்சனையை சந்திக்க கூட்டு குடும்பம் தனி தனியாக பிரிகிறது.  பின் குடும்ப சூழலை உணர்ந்தும் அம்மா ஜெயா சுதாவின் பேச்சை கேட்டும் பிசினஸ் தலைமை பொறுப்பை ஏற்கிறார் தளபதி விஜய். அதே நேரத்தில் பிரிந்த குடும்பத்தை இணைக்க போராடுகிறார். இதை அறிந்த வில்லன் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பிரச்சனைகளை கொண்டு வர திட்டங்கள் போட அந்த திட்டங்களை ஒவ்வொன்றாக முறியடிக்கிறார்  விஜய். இதனிடையே ராஷ்மிகவுடனான காதல் , காமெடி என்று குடும்பங்களை குதுகலபடுத்த சில காட்சிகள். இறுதியில் கூட்டு குடும்பம் இணைந்ததா என்பதே படத்தின் கதையாக இருக்க கூடும்.

கிட்டத்தட்ட படத்தின் கதையை லேசாக சொல்லி விட்டு போகும் டிரைலரில் சில காட்சிகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ

1.ஒரு காட்சியில் சரத்குமாரிடம் சுமன் பேசுகையில்,  “நீங்க உங்க இரண்டு பசங்கள தான் குடும்பம் னு அறிமுகப்படுத்தினிங்க உங்க மூணாவது மகன பத்தி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே!” என்று கேட்பார்.  மற்றும் தன் அம்மாவிடம் மட்டுமே அதிகம் பேசும் காட்சி டிரைலரில் இடம் பெற்றிருக்கும் அதன் படி விஜய் அப்பாவின் கட்டளையின் கீழ் படியாத பிள்ளையாகவும் அம்மாவின் செல்ல பிள்ளையாகவும் அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு பெசாதவருமாய் அவரது கதாபாத்திரம் இருக்ககூடும்.  

five things you should know about thalapathy vijay varisu film

2. கண்டிப்பான அப்பாவாகவும் தொழிலில் தீவிரமான தொழிலதிபராகவும் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைக்கும் ஆளாகவும் சரத்குமார் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் கண்ணு தொறந்தேதான் இருக்கணும்” என்றும் பிரகாஷ் ராஜ் விஜயிடம் “போய் அப்பா உன் அப்பகிட்ட சொல்லு இந்த சீட்டோட ஹீட்ட இனிமே தான் பாக்க போற” என்ற வரும் சில வசனங்கள் மூலம் சரத்குமார் பிசினசில் எவ்வளவு பிரச்சனை உள்ளது என்பதை பூடகமாக டிரைலரில் வைத்திருப்பார். குறிப்பாக சரத்குமார் தன் நாற்காலியை தொட்டு பார்த்திருக்கும் காட்சி இந்த செய்தியை உறுதிபடுத்துகிறது.

 

five things you should know about thalapathy vijay varisu film

3. பிசினசை தொடர்ந்து குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாக்கும் பிரகாஷ் ராஜ் கூட்டு குடும்பம் உடைகிறது. அதனால் பிசினஸ் தலைமை கேள்வி குறியாக பிரகாஷ் ராஜ் உடன் சவால் விடுகிறார் விஜய். “அன்போ அடியோ எனக்கு கொடுக்கும் போது யோசிச்சு கொடுக்கணும்..நீ எத கொடுக்குறியோ அதா டிரிபிளா கொடுப்பேன்” என்ற காட்சியுடன் அப்பாவின் பிசினசை கையிலெடுக்க வாய்ப்புள்ளது   

five things you should know about thalapathy vijay varisu film

4. “பவர் சீட்டுல இருக்காது சார்.. அதுல வந்து ஒருத்தன் உட்காரான்ல அவன்ட்ட தான் இருக்கும் .. நம்ம பவர் அந்த ரகம்..  என்ற வசனமும் அந்த வசனத்தின் இடையே வரும் காட்சிகளும் விஜயின் நிர்வாக திறன் அப்பாவை விட வேகமாக விவேகமாக எந்த வகையில் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் ‘பாஸ்’ ஆக இரண்டாம் பாதியில் வருகிறார் என்பதை காட்டுகிறது.

five things you should know about thalapathy vijay varisu film

5. மேலும் தொழிலாளர்களுடன் களத்தில் இறங்கி நிர்வகிக்கும் போது தீ தளபதி என்ற பாடலும் தொழிலாளர் மத்தியில் விஜயின் மாஸான ஸ்லோ மோஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

five things you should know about thalapathy vijay varisu film

 

6. ஒரு காட்சியில் மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் படம் விஜய் வீட்டில் இருக்கும். குடும்பத்தின் மூதவராய்  குறிப்பிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்

five things you should know about thalapathy vijay varisu film

ஒவ்வொரு காட்சியிலும் விஜய் துள்ளளுடனும் தோன்றி திரையை அலங்கரிக்கிறார். பீட்டர் ஹைன்,திலிப் சுப்பிராயன் சண்டை காட்சிகளும் தமனின் பின்னணி இசையும் கவர்கிறது. மொத்தத்தில் தளபதி விஜய் நடிப்பில் பண்டிகை நாட்களை குடும்பங்களுடன் கொண்டாட ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக வருகிறது வாரிசு. படம் மக்களுக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதை படத்தின் வெளியீட்டுக்கு பின்பே தெரியும்.