குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் குணச்சித்திர நடிகராகவும்,வில்லன் நடிகராகவும் தமிழ்,மலையாள சினிமாக்களை கலக்கியவர் பப்லு பிரித்விராஜ்.பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாறினார் பப்லு பிரித்விராஜ்.

படங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து பப்லு பிரித்விராஜ் சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார் ,வாணி ராணி,அரசி,மர்மதேசம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தினார் பப்லு பிரித்விராஜ்.ஜோடி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் பிரித்விராஜ்.ஜெயா டிவியில் சவால் என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த பிரித்விராஜ்.ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் பிரித்விராஜ்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உடற்பயிற்சியில் பெரிதும் ஆர்வம் கொண்ட இவர் தற்போதும் பிட்னஸில் பெரிதளவு கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும்போது வெயிட் ஒரு சிறிய விபத்தால் அவரது கழுத்திலேயே விழுந்துள்ளது.அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகாமல் தான் நலமாக இருப்பதாக தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.