கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது.

பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளும் சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை தங்களது கட்சியில் சேர்ப்பதுடன், அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புகளும் அளித்து வருகின்றன.

அந்த வகையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கிசுகிசுப்படத் தொடங்கி உள்ளன.

பஞ்சாப் அரசியல் களம் கடந்த சில காலமாகவே, சூடுபிடித்துக்கொண்டு தான் இருக்கிறது. 

அதாவது,  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியில், ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகள் வெடித்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. 

குறிப்பாக, காங்கிரஸ் கட்சிககு எப்போதும் வழக்கமாக ஏற்படக் கூடிய கோஷ்டி தகராறு, பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நீடித்து வந்தது.

அதன்படி, முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும், அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் எப்போதும் முட்டல் மோதல் எதிரொலித்துக்கொண்டே இருந்தன. 

இது, திரைமறைவில் தொடக்கத்தில் காணப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் இந்த சண்டை வெளிப்படையாகவே நடக்கத் தெடங்கியது.

இதனால், காங்கிரஸ் தலைமை அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், அது கடைசியில் பலன் அளிக்காமல் போனது. 

கடைசியில், முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் திடீரென்று ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி கடும் அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் தற்போது முதலமைச்சராக்கப்பட்டிருக்கும் சரண்ஜித் சிங்குக்கும், சித்துவுக்கும் தற்போது நல்ல புரிதல் இருப்பதாகவும், இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் தற்போது சுமுகமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் வர இருக்கின்றன.

அங்கு, ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் ஒரு புறம் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியாக இருகக்கும் பாஜகவோ, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி தனது சாணக்கிய தனத்தைக் காட்டி வெற்றிப் போற போராடி வருகிறது.

அதன்படியே, அந்த மாநிலத்தில் பிரபலமாக உள்ள சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய விளையாட்டு வீரர்கள் என பொது மக்களை அதிகம் கவர்ந்தவர்களை தங்களது கட்சிககுள் சேர்க்கும் வேலையில் இரு கட்சியினரும் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் தான், நவ்ஜோத் சித்து இன்று வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில், பஞ்சாப் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், “முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன், தான் இணைந்து நிற்கும் போட்டோவை” பகிர்ந்திருந்தார்.

இந்த போட்டோவுடன், “சாத்தியக் கூறுகள் அதிகம்..” என்றும், அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வார்த்தை தான், பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், 'முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், உடனே காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார்” என்று, செய்திகள் கிசுகிசுக்க தொடங்கி உள்ளன.

முக்கியாக, “ஹர்பஜன் அணிந்திருக்கும் பனியனில், காங்கிரஸ் கட்சியைக் குறிக்கக் கூடிய நிறங்கள் இடம் பெற்றிருப்பதும்” இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதுடன், இது பல்வேறு சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.