தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் திரைப்படம் லத்திசார்ஜ். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இதனையடுத்து நடிகர் விஷால் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் முதல் லண்டனில் தொடங்க உள்ளது. முன்னதாக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 26ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமான எனிமி கடந்த தீபாவளி தினத்தன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனிமி படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் தமன் மற்றும் சாம்.சி.எஸ் இணைந்து இசை அமைத்திருந்தனர்.

தமன் இசையில் வெளிவந்த எனிமி படத்தின் டம் டம் பாடல் ரசிகர்களின் ஃபேவரட் பாடலானது. குறிப்பாக நடிகை மிருணாளினி ரவியின் நடனம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது டம்டம் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ட்ரெண்டாகி வரும் டம் டம் பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.