தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை பிரியா பவானி சங்கர், உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்து தல மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்களில் தற்போது கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்

இதனிடையே பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம்,  S.J.சூர்யாவுடன் இணைந்து பொம்மை, அசோக்செல்வன் உடன் இணைந்து ஹாஸ்டல் மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து யானை என கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.

முன்னதாக எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் மற்றும் நயன்தாராவின் ஐரா படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் KM இயக்கத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் BLOOD MONEY . பிரியா பவானி ஷங்கருடன் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் மற்றும் நடிகர் கிஷோர் இணைந்து நடித்துள்ளனர்.

எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள BLOOD MONEY திரைப்படத்திற்கு பாலமுருகன் ஒளிப்பதிவில், சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 24-ம் தேதி நேரடியாக ZEE 5 ORIGINALS OTT தளத்தில் BLOOD MONEY திரைப்படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் BLOOD MONEY படத்தின் டீசர் தற்போது வெளியானது. பரபரப்பான அந்த டீசர் இதோ...