தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் சமுத்திரகனி திகழ்கிறார். தொடர்ந்து தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், பவன் கல்யாணின் பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, பிரசாந்தின் அந்தகன் ,S.S.ராஜமௌலியின் RRR மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரகனி .

மேலும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே ஆகிய திரைப்படங்களில்  கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னதாக பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன், கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் மற்றும் Jetty புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வழங்கும் ரைட்டர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் தயாராகியுள்ள ரைட்டர் திரைப்படம் ரைட்டர் படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள ரைட்டர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரைட்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான ரைட்டர் படத்தின் ட்ரைலர் இதோ...