தமிழ் திரையுலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி. கடைசியாக, ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த கட்டலகொண்டா கணேஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அதர்வாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக டார்லிங் எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கூர்க்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் GLIMPSE வீடியோ வெளியானது. 100 திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சாம் ஆண்டனுடன் அதர்வா இணைந்துள்ள இப்படத்திற்கு TRIGGER என பெயரிடப்பட்டுள்ளது.

பிரமொத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க அருண்பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ள TRIGGER படத்தின் முன்னோட்டமாக டைட்டிலை அறிவிக்கும் அதிரடியான GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…