தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் 25 நாட்களை கடந்து  மெகா ஹிட்டாகியுள்ளது. தொடர்ந்து ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் #SK20 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் #SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

கடந்த சில காலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரின் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் இது குறித்து நடிகர் அருண் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார். முன்னதாக தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் யானை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அருண்விஜய் செய்தியாளர்கள் சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மற்றும் அருண் விஜய் ரசிகர்கள் இடையிலான மோதல்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு,  
“அதெல்லாம் சில தவறான புரிதல்களால் நடைபெறுவது… எனக்கும் அவருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது… நீங்களே பார்த்திருப்பீர்கள் என் திரைப்படத்தின் ட்ரைலரை அவர்தான் வெளியிட்டார்… இதெல்லாம் மிகவும் ஆரோக்கியமான விஷயம்… நான் 25 வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன்… என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு… தற்போது அவர் இருக்கும் நிலையைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது… எனவே ரசிகர்களுக்கு கூறிக்கொள்வது அன்பை பரப்புங்கள் என்பது மட்டுமே.. இங்கு அனைவரும் சமமே… என அருண் விஜய் தெரிவித்துள்ளார். அருண் விஜய் பேசிய அந்த வீடியோ இதோ…