இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற திரை ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை பல மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து ரசித்து வரும் நிலையில் விக்ரம் படத்தின் வெற்றக்கு அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும்  பேசி உலக நாயகன் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், 
“தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை… திறமையான தரமான நடிகர்களையும் தான்! அந்த வரிசையில், என்னையும் எங்கள் விக்ரம் திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்… திரு.அனிருத், திரு.கிரிஷ், எடிட்டர் திரு.பிலோமின், திரு.அன்பறிவு, திரு.சதீஷ்குமார் தொடங்கி, பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை பார்த்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது தான் நியாயம்! தம்பிகள் திரு.விஜய்சேதுபதி, திரு.ஃபகத் பாசில், திரு.நரேன், திரு.செம்பன் வினோத் என வீரியமிக்க நடிகர் படை வெற்றியின் முக்கிய காரணங்கள்… கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன். இயக்குனர் திரு.லோகேஷ் அவர்களுக்கு சினிமாப்பாலும் என் மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விளையும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனலின் ஊழியன் உங்கள் நான்…” 
என தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…