காதல் சண்டை.. பெண் மீது ஆசிட் வீசிய பெண்! அதிர்ச்சி..

காதல் சண்டை.. பெண் மீது ஆசிட் வீசிய பெண்! அதிர்ச்சி.. - Daily news

முன்னாள் காதலனுடன் பழகிய பெண் மீது ஆசிட் அடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் மற்றொரு பெண்ணும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மதுரவாயலில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை மதுரைவாயில் பகுதியைச் சேர்ந்த 30 வயதான லேகா என்பவரது வீட்டிற்கு, நேற்றைய தினம் ஐஸ்வர்யா என்ற பெண் வந்திருக்கிறார். 

அப்போது, லேகா வீட்டு கதவை ஐஸ்வரியா தட்டி உள்ளார். இதனால், வீட்டில் உள்ளே இருந்து வந்து லேகா, கதவை திறந்ததும், அந்த கன நேரத்தில் பாத்ரூமை சுத்தம் செய்யும் ஆசிட்டை கையில் வைத்திருந்த ஐஸ்வரியா, திடீரென்று லேகா மீது ஊற்றி இருக்கிறார். 

இதில், லேகாவுக்கும் அவரது அம்மாவுக்கும் முகத்தில் எரிச்சலுடன் காயம் ஏற்பட்டு இருவரும் அலறி துடித்த நிலையில், சத்தம் போட்டு கத்தி உள்ளனர்.

இதனால், இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், அவர்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துமனையில் சேர்த்து உள்ளனர்.

அங்கு, பாதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். 

இந்த விசாரணையில், போரூர் மங்களா நகரை சேர்ந்த 37 வயதான ஐஸ்வர்யா, 36 வயதான தீனதயாளன் ஆகிய 2 பேர் சம்மந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அத்துடன், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், “லேகா, பார்த்திபன் என்பவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் அந்த காதல் முறிந்த நிலையில், பின்னர் சில கால இடைவெளியில் பார்த்திபனுக்கும் - ஐஸ்வர்யாவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

அப்போது, காதலி ஐஸ்வர்யாவுக்கு, பழைய காதலியான லேகாவின் காதல் பற்றி எதுவும் தெரியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சூழலில் தான், பார்த்திபனின் நண்பரான தீனதயாளன் என்ற இளைஞர், ”லேகா, தற்போதும் பார்த்திபனை காதலிப்பதாக” ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ஐஸ்வரியா, கடும் கோபம் அடைந்த நிலையில், வீட்டில் இருந்த பாத்ரூமை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்துக்கொண்டு, தீனதயாளனை அழைத்து கொண்டு சென்று, லேகா மீதும் அவரது தாயார் மீதும் ஆசிட்டை வீசி இருக்கிறார்” என்பது தெரிய வந்தது. இவற்றுடன், அந்த பெண் லேகாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஐஸ்வரியா மற்றும் தீனதயாள் ஆகிய இருவர் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, காதல் விவகாரத்தில் ஒரு இளம் பெண் மீது, மற்றொரு இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment