சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!

சமந்தாவின் சாகுந்தலம் பட மல்லிகா மல்லிகா பாடல்,samantha in shaakuntalam movie malligaa malligaa song out now | Galatta

மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவராக அடுத்தடுத்து தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக திகழும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் யசோதா. சில வாரங்களுக்கு முன் PAN INDIA படமாக வந்த யசோதா திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்துள்ள சமந்தா ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ள நடிகை சமந்தா, இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்தில் நடித்துள்ளார். இதனிடையே இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். 

தெலுங்கில் தயாராகி இருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். 

சாகுந்தலம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் மல்லிகா மல்லிகா பாடல் தற்போது வெளியானது. மனதை வருடும் அந்த பாடல் இதோ…

 

விஜய் சேதுபதி அதிரடியான முதல் வெப் சீரிஸ்... கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

விஜய் சேதுபதி அதிரடியான முதல் வெப் சீரிஸ்... கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE வீடியோ இதோ!

முட்டாள்தனமான கேள்வியா இருக்கு... துணிவு பட ஆக்ஷன் காட்சிகளின் லாஜிக் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த சுப்ரீம் சுந்தர்!
சினிமா

முட்டாள்தனமான கேள்வியா இருக்கு... துணிவு பட ஆக்ஷன் காட்சிகளின் லாஜிக் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த சுப்ரீம் சுந்தர்!

எந்த இடத்தில டூப் பாத்தீங்க... அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்! வீடியோ இதோ
சினிமா

எந்த இடத்தில டூப் பாத்தீங்க... அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்! வீடியோ இதோ