“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” - படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

துணிவு படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த மஞ்சு வாரியர் - Manju warrier about thunivu movie and working with ajith kumar | Galatta

அஜித் நடித்து எச் வினோத் இயக்கி ரசிகர்களின் பேராதரவோடு வெளியான படம் ‘துணிவு’. கடந்த ஜனவரி 11 அன்று வெளியாகி இன்று வரை திரையரங்குகளை ரசிகர்களின் கொண்டாட்டதுடன் அலங்கரித்து வருகிறது. மேலும் உலகளவில் வசூல்களை குவித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடித்த கதாநாயகி மஞ்சு வாரியர் நமது கலாட்டா பிளஸ் பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவரது திரைப்பயணம் குறித்தும் துணிவு படத்தில் பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், துணிவு படத்தில் நடித்தது குறித்து "நான் துணிவு படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் இந்த படத்தில் எல்லா விதமான செயல்பாடுகளும் இதற்கு முன் நான் செய்ததில்லை. எனக்கு துப்பாக்கி எப்படி பிடிக்க வேண்டுமென்றே தெரியாது. நான் அதை முன்பு பயன்படுத்தியது இல்லை. அதுபோன்ற கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் துணிவு தான் முதல் படம். நீங்கள் படம் பார்க்கும் போது தெரியும் நான் என்னென்ன வேலைகளை செய்திருப்பேன் என்று.. நான் ஒவ்வொரு காட்சியையும் ரசித்த படியே நடித்தேன். ஆரம்பத்தில் நான் பயந்தேன்.. அஜித் சார் ஆக்ஷன் படங்களில் சிறந்து விளங்குபவர். எச் வினோத் சிறந்த படங்களை கொடுத்தவர். அவர்கள் படத்தில் என்னால் எந்தவொரு வேடிக்கையான விஷயமும் நடந்து விட கூடாதென்று பயந்தேன்.  பின் நான் அதை சவாலாக ஏற்று நடித்தேன். பின் அதெல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது" என்று குறிப்பிட்டார்.

நீங்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முதலில் தயங்குனீர்களா? என்ற கேள்விக்கு..

"தயக்கம் ஏதும் இல்லை... என்னை எச். வினோத் அழைத்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவருடைய முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம்' ஒன்று படங்களையெல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன். அசுரனுக்கு பின் இந்த வாய்ப்பு கிடைத்தது. அஜித் சார் இருப்பதால் இந்த படம் எனக்கு மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாறியது. அசுரன் படத்திற்கு பிறகு அசுரன் மாதிரி இருக்கும் என்று சொல்லியே பல கதைகள் என்னிடம் வந்தது. நான் அதை புறக்கணித்துள்ளேன். ஆனால் இந்த படம் புதிதாக இருந்தது. அதனால் இந்த படத்தை ஏற்க முடிந்தது. ஆரம்பத்தில் எனது கதாபாத்திரத்திரம் குறித்த கேள்விகள் மட்டுமே இருந்தது தவிர தயக்கம் ஏதும் இல்லை"  என்று குறிப்பிட்டார்.

துணிவு பட நாயகி மஞ்சு வாரியர்  துணிவு படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவரது திரைப்பயணம் குறித்த தகவல்களையும் பகிர்ந்த முழு வீடியோ இதோ..

“ரசிகர் இறந்ததை கேள்விப்பட்டு அஜித் சார் நல்ல மனநிலையில் இல்லை “ – துணிவு stunt master சுப்ரீம் சுந்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ..
சினிமா

“ரசிகர் இறந்ததை கேள்விப்பட்டு அஜித் சார் நல்ல மனநிலையில் இல்லை “ – துணிவு stunt master சுப்ரீம் சுந்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ..

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி -  ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..
சினிமா

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி - ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..
சினிமா

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..