“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..

வாரிசு திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் குறித்து பாடலாசிரியர் விவேக் கருத்து - lyricist vivek about varisu 210 crores colllection | Galatta

தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் விஜய் நடித்த 'வாரிசு'. இப்படம் கடந்த ஜனவர் 11 திரையரங்குகளில் ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் வெளியானது. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகிய வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம்,ஜெய சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வாரிசு திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது இந்நிலையில் வாரிசு திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதனைதொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகத்தில் வாழ்த்துகளை தெரிவித்தும் பதிவை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு திரைப்படம் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூல் செய்ததை பகிர்ந்து அதனுடன்

"இந்த பதிவு துணிவு படத்துடனான ஒப்பீடு அல்ல. படம் வெற்றியுடன் ஓடுவதற்கு வாழ்த்துகள்"  என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் அதனுடன் “வாரிசு திரைப்படம் பொங்கல் வரை நல்ல வரவேற்புடன் ஓடும் என்று தெரிந்தவையே. ஆனால் இன்றைய நாளுக்காக தான் காத்திருந்தேன். இந்த அறிவிப்பிற்காக தான் காத்திருந்தேன். எனக்கு இப்போது தான் இந்த அறிவிப்பு தெரிய வந்தது.. இப்ப போட்றா BGM அ...” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது பதிவினை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

(Note : Its not a comparative post about Thunivu. Wishing the film and the team well on its run🌹)

Its a know fact that Varisu will run well till pongal. But was eagerly waiting for today’s reports. Just got to know it. Ippa Podra BGM ah🔥 pic.twitter.com/7L6rQnpBiQ

— Vivek (@Lyricist_Vivek) January 18, 2023

தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 2017 ல் வெளிவந்த 'மெர்சல்' படத்தில் முழு பாடலையும் எழுதி விஜயின் கவனத்தை பெற்றவர் பாடலாசிரியர் விவேக். அதன் பின் ‘சர்க்கார்’, ‘பிகில்’ படங்களிலும் விஜயுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். விஜய் கூட்டணியில் வாரிசு இவருக்கு நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் விவேக் மேலும் படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இன்னும் ஒரு வாரத்துல.. தளபதி 67 அப்டேட்..”  –  அட்டகாசமான அறிவிப்பு .. வைரலாகி வரும் வீடியோ இதோ..
சினிமா

“இன்னும் ஒரு வாரத்துல.. தளபதி 67 அப்டேட்..” – அட்டகாசமான அறிவிப்பு .. வைரலாகி வரும் வீடியோ இதோ..

“ரசிகர் இறந்ததை கேள்விப்பட்டு அஜித் சார் நல்ல மனநிலையில் இல்லை “ – துணிவு stunt master சுப்ரீம் சுந்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ..
சினிமா

“ரசிகர் இறந்ததை கேள்விப்பட்டு அஜித் சார் நல்ல மனநிலையில் இல்லை “ – துணிவு stunt master சுப்ரீம் சுந்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ..

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி -  ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..
சினிமா

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி - ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..