வெங்கட் பிரபுவின் பக்கா மாஸ் போலீஸ் படம்... சர்ப்ரைஸாக வந்த அசத்தலான கேரக்டர் GLIMPSE இதோ!

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட புது கேரக்டர் போஸ்டர்,venkat prabhu naga chaitanya in custody movie new character poster | Galatta

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராகவும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் திகழும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படம் கஸ்டடி. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இடம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.  இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், கஸ்டடி படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரமான ரேவதி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த கேரக்டர் போஸ்டர் இதோ…
 

Introducing our Charming and Gorgeous @IamKrithiShetty as the Resilient #Revathi🔥 from #Custody ❤️‍🔥

A @vp_offl HUNT💥#CustodyOnMay12@chay_akkineni @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @realsarathkumar #Priyamani #SampathRaj @SS_Screens @jungleemusicSTH pic.twitter.com/5N96cMCshc

— Srinivasaa Silver Screen (@SS_Screens) January 18, 2023

எந்த இடத்தில டூப் பாத்தீங்க... அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்! வீடியோ இதோ
சினிமா

எந்த இடத்தில டூப் பாத்தீங்க... அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்! வீடியோ இதோ

வலுவோடு திரும்பி வாங்க நண்பா... விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை பற்றி பிரபல இயக்குனரின் ட்வீட்! விவரம் உள்ளே
சினிமா

வலுவோடு திரும்பி வாங்க நண்பா... விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை பற்றி பிரபல இயக்குனரின் ட்வீட்! விவரம் உள்ளே

தமிழ்ல ரொம்ப மரியாதையா பேசணும்!- வம்சிக்கு அட்வைஸ்… வாரிசு பட மேடையை கலகலப்பாக்கிய VTVகணேஷ்! வீடியோ இதோ
சினிமா

தமிழ்ல ரொம்ப மரியாதையா பேசணும்!- வம்சிக்கு அட்வைஸ்… வாரிசு பட மேடையை கலகலப்பாக்கிய VTVகணேஷ்! வீடியோ இதோ