முட்டாள்தனமான கேள்வியா இருக்கு... துணிவு பட ஆக்ஷன் காட்சிகளின் லாஜிக் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த சுப்ரீம் சுந்தர்!

துணிவு பட ஆக்ஷன் காட்சிகளின் லாஜிக் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த சுப்ரீம் சுந்தர்,supreme sundar reply to logic questions in thunivu movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. பக்கா அதிரடி ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக அனைத்து தரப்பு மக்களும் துணிவு படத்தை ரசித்து வருகின்றனர்.

இதனிடையே துணிவு திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நிறைய லாஜிக் தவறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் பரவி வரும் நிலையில், இவை அனைத்திற்கும் நமது கலாட்டா சேனலின் பிரத்யேக பேட்டியில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வகையில் அனைவரும் குறிப்பிடும் லாஜிக் தவறுகளாக, அஜித் குமாரின் மேல் துப்பாக்கி குண்டுகள் படுவதாகட்டும் ராக்கெட் லாஞ்சர் தாக்குவதாகட்டும் அல்லது மஞ்சுவாரியரின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு துளைப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு வரும் எதிர்மறை கேள்விகள் குறித்து கேட்டபோது,

"உலக சினிமாவை நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள் என்றால், எந்த உலக சினிமாவாக இருந்தாலும் எல்லாருமே அப்படித்தான்! காட்ஸில்லா என்று ஒரு படம்! பார்த்தீர்கள் என்றால் அவ்வளவு பெரிய மிருகத்திடமிருந்து ஹீரோ தப்பித்து விடுவார் எல்லாரையும் கொல்லும் அந்த மிருகம் ஏன் அவரை மட்டும் விட்டு வைத்தது. அதேபோல் ஹாரர் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாரையும் கொல்லும் அந்த பேய் ஹீரோ ஹீரோயினை கொல்வதில்லை. ஏன் அப்படி? அதே போல் துப்பாக்கி சுடுவது அதிகமுள்ள கொண்ட படங்களை பாருங்கள்… எல்லாரையும் சுடுவார்கள் ஹீரோவும் ஹீரோயினும் தப்பித்து விடுவார்கள். ஏன் இப்படி? ஏனென்றால் ஹீரோ! அவர்களுக்கான கதை அது. தப்பித்து தான் ஆகவேண்டும். ராக்கெட் லாஞ்சரை அவர் கையில் பிடித்திருந்தார் என்றால் வர லான்ச்ரை கையில் பிடித்துவிட்டார் அதை எப்படி நம்ப தகுந்ததாக இருக்கிறது என கேட்கலாம். லாஞ்சர் வரும்போது அவர் பேங்க் உள்ளே இருக்கிறார். எல்லாவற்றையும் பாதுகாக்கிறார். லாஞ்சர் அடிக்கும் போது அவர் பறந்து விழுந்துவிட்டார் மற்றவர்கள் எல்லாம் கீழே விழுகிறார்கள். அந்த விஷயங்களை எல்லாம் நாங்கள் கொடுத்து இருக்கிறோம். இந்த மாதிரியான கேள்வி ஒரு முட்டாள்தனமான கேள்வியாக இருக்கிறது. ஹீரோ என்றால் அப்படித்தான் நிறைய திரைப்படங்கள் உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் எல்லாரும் எடுத்தது போலவே நீங்களும் எடுத்துவிட்டீர்கள் என கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. அதற்கான ஒரு கதையாக இருந்து ஒரு புல்லட் அடிபட்ட ஹீரோ எப்படி வாழ்கிறார். அந்த புல்லட்டை வெளியில் எடுத்து போட்டுவிட்டு தையல் போட்டுக்கொண்டு… அப்படி ஒரு கதை கொண்டு போனால் அதற்கு ஏற்ற மாதிரி செய்யலாம். அடுத்தடுத்து கதை நகரும்போது அவர் மேல் புல்லட் அடிப்படக்கூடாது அதற்கான விஷயங்கள் அதற்கான நம்பத் தகுந்த விஷயமாக தான் செய்திருக்கிறோம். ஒரு ஸ்டண்ட் இயக்குனராக அதைத்தான் நான் செய்ய முடியுமே தவிர, இந்த கேள்விகள் எல்லாம் பயனற்றது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எல்லா படங்களிலும் அதுதான் இருக்கிறது." என பதிலளித்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தரின் அந்த முழு பேட்டி இதோ…
 

தமிழ்ல ரொம்ப மரியாதையா பேசணும்!- வம்சிக்கு அட்வைஸ்… வாரிசு பட மேடையை கலகலப்பாக்கிய VTVகணேஷ்! வீடியோ இதோ
சினிமா

தமிழ்ல ரொம்ப மரியாதையா பேசணும்!- வம்சிக்கு அட்வைஸ்… வாரிசு பட மேடையை கலகலப்பாக்கிய VTVகணேஷ்! வீடியோ இதோ

வாரிசு திரைப்படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்... வைரலாகும் எமோஷ்னல் பதிவு இதோ!
சினிமா

வாரிசு திரைப்படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்... வைரலாகும் எமோஷ்னல் பதிவு இதோ!

வாரிசு - துணிவு வசூல் குறித்த கேள்விகளுக்கு தரமான பதில் கொடுத்த இயக்குனர் வம்சி! விவரம் உள்ளே
சினிமா

வாரிசு - துணிவு வசூல் குறித்த கேள்விகளுக்கு தரமான பதில் கொடுத்த இயக்குனர் வம்சி! விவரம் உள்ளே