எந்த இடத்தில டூப் பாத்தீங்க... அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்! வீடியோ இதோ

துணிவு பட ஸ்டண்ட் குறித்த விமர்சனங்களுக்கு சுப்ரீம் சுந்தர் அதிரடி பதில்,supreme sundar reply to ajith kumar in thunivu stunts are dupe | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் வெளியீட்டு திரைப்படங்களான அஜித் குமாரின் துணிவு மற்றும் தளபதி விஜயின் வாரிசு ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமாக இரண்டு படங்களும் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என இரண்டு ஹிட் படங்களின் வரிசையில் தற்போது ஹாட்ரிக் ஹிட்டாக இயக்குனர் H.வினோத் - அஜித் குமார் - போனி கபூர் கூட்டணியில் துணிவு திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே துணிவு படத்தின் சில சண்டை காட்சிகளில் அஜித் குமாருக்கு பதிலாக டூப் அதிகம் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய துணிவு திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் அவர்கள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து பேசுகையில், 

“அவர்களுக்கெல்லாம் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுங்கள் தயவுசெய்து என்னிடம் பேச சொல்லுங்கள். எங்கே பார்த்தார்கள், படத்தில் எந்த இடத்தில் டூப் பார்த்தார்கள் என சில புகைப்படங்களை எனக்கு அனுப்ப சொல்லுங்கள். நான் அவர்களிடம் பதில் சொல்கிறேன். ஏனென்றால் நிறைய பேர் கேட்கிறார்கள் அந்த கேள்வியை, டூப்… டூப் என்று, டூப் என்பதும் ஒரு கதாபாத்திரம் தான் அவரும் உயிரை பணயம் வைத்து தான் செய்கிறார். எங்களுக்கு ஹீரோ தேவை ஒரு படத்தில், என்ன கதைக்கு எந்த சண்டைக் காட்சியில் எது வைத்து எடுக்கிறோம் என்றுதான் இருக்கும். ஒரு கார் இடித்து மலை மீது இருந்து உருண்டு கீழே விழுவது போன்ற ஒரு காட்சி இருக்கிறது. அதில் அஜித் சாரை காருக்குள் உட்கார வைக்க முடியுமா? மஞ்சு வாரியர் மேடமை உட்கார வைக்க முடியுமா? அதற்கு டூப்பை தான் உட்கார வைப்போம். அது தான் டூப். ஒரு நடிகரால் செய்ய முடியாது அல்லது செய்யக்கூடாது என நாங்கள் முடிவு செய்து வைத்திருப்போம். ஏனென்றால் அதில் ஏதாவது அடிபட்டுவிட்டால்… நிறைய பேர் சொல்வார்கள் மாஸ்டர் நாங்கள் இதை செய்கிறோம் என இந்த ஜம்ப் தானே ரோப்ல நானே அழகா இறங்குறேன். என்றெல்லாம் கேட்பார்கள். அது மாதிரியான பைக் வைத்து செய்யக்கூடிய ஸ்டன்ட் எல்லாம் செய்வோம். நாம் என்ன செய்கிறோம் என்றால் பாதுகாப்பு. நீங்கள் இறங்குவீர்கள் எல்லாம் தெரியும்… ஏதோ ஒரு சின்ன தவறு நடந்து ஏதாவது நடந்தால் அதன் பிறகு அந்த படமே நின்று விடும் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த பணத்தை நம்பி இருக்கிறோம் தெரியுமல்லவா... இது யாருக்கும் தெரிவதில்லை. சும்மா வாய் வார்த்தைக்கு பேசிவிடலாம். பல குடும்பங்கள் ஒரு ஹீரோவை நம்பி இன்று இருக்கிறார்கள். ஒருவேளை அவருக்கு ஏதாவது அடிபட்டது என்றால், இரண்டு மாதம் மூன்று மாதம் படப்பிடிப்பு நின்றால், அந்த தயாரிப்பாளருக்கு, அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, அந்த மொத்த தயாரிப்பு குழுவின் தேதிகள் அனைத்தும் நின்றுவிடும். எனவே எங்களுக்கு அவ்வளவு அதிகாரமும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சண்டைக் காட்சி எடுக்கும் போது இவ்வளவு விஷயங்களையும் நாங்கள் தாங்கிக் கொண்டு பாதுகாப்போடு நாங்கள் சண்டைக் காட்சி எடுக்க வேண்டும். எனவே டூப் என்பதை நாங்கள் எடுப்போம் தேவையான இடத்தில் மட்டும் கண்டிப்பாக டூப்பை பயன்படுத்துவோம். அதற்காக சண்டைக் காட்சி முழுக்க டூப்பை வைத்து எடுத்துவிட்டு ஒரு கலைஞரை சும்மா உட்கார வைத்து விட்டு எடுக்க மாட்டோம். அது அவர்களுக்கும் பிடிக்காது” என பதிலளித்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தரின் அதிரடியான அந்த பேட்டி இதோ…

வாரிசு திரைப்படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்... வைரலாகும் எமோஷ்னல் பதிவு இதோ!
சினிமா

வாரிசு திரைப்படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்... வைரலாகும் எமோஷ்னல் பதிவு இதோ!

வாரிசு - துணிவு வசூல் குறித்த கேள்விகளுக்கு தரமான பதில் கொடுத்த இயக்குனர் வம்சி! விவரம் உள்ளே
சினிமா

வாரிசு - துணிவு வசூல் குறித்த கேள்விகளுக்கு தரமான பதில் கொடுத்த இயக்குனர் வம்சி! விவரம் உள்ளே

வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் தளபதி விஜயின் பதில் இதுதான்.. நன்றி கூறும் சந்திப்பில் பகிர்ந்து கொண்ட வம்சி!
சினிமா

வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் தளபதி விஜயின் பதில் இதுதான்.. நன்றி கூறும் சந்திப்பில் பகிர்ந்து கொண்ட வம்சி!