சுவாரசியமான கதைக்களம் விறுவிறுப்பான திரைக்கதை என முதல் படத்திலேயே முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த படத்தில் கார்த்தி போன்ற ஒரு நடிகரை வைத்து அசத்தலாக கைதி என்ற ஆக்ஷன் படத்தினை எடுத்தார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார்,இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து இவர் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தினை பார்க்கும் முன் தனது இயக்கத்தில் வெளியான கைதி படத்தினை ஒருமுறை பார்க்க ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள் வைத்தார்.

கைதி படத்தில் இடம்பெற்ற கதைக்களம் , கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன,இரண்டு படங்களின் உலகங்களும் இணைவது போல ஆங்கில படங்களின் ஸ்டைலில் விக்ரம் படத்தினை லோகேஷ் தயார் செய்துள்ளார்.இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் விக்ரம் 3 மற்றும் கைதி 2 படங்களுக்கு லீட் கொடுக்கும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.2019-ல் வெளியான கைதி பக்கா ஆக்ஷன் படமாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது,அதில் சில கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருக்கும் அதனை கைதி 2வில் லோகேஷ் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் படத்தில் கைதி 2விற்கான லீட் வைக்கப்பட்டதை அடுத்து கைதி 2 விரைவில் டேக் ஆப் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கைதி 2 ஆரம்பிக்கலாமா என்று பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளார்.வெகு விரைவில் லோகேஷ் கைதி 2 வேலைகளை தொடங்குவார் என்று தெரிகிறது.