முதலாளியால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் தீ காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளதால், “தீ வைத்து எரிக்கப்பட்டாரா? தீ வைத்துக்கொண்டாரா?” என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பவானி கர்ணபுரம் 5 வது வீதியைச் சேர்ந்த 37 வயதான மலர் என்ற பெண், திருமணமான நிலையில், அடுத்த சில வருடத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இதனையடுத்து, தனது குடும்ப சூழல் கருதி, அந்த பெண் அங்குள்ள பவானியில் “கணபதி சிமெண்ட் மற்றும் டைல்ஸ்” என்ற கடையில் வேலைக்கு சேர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்த பெண்ணிடம், அந்த கடையின் உரிமையாளர் நவநீதன், அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொருமை இழந்த அந்த பெண் மலர், இது தொடர்பாக கடந்த மாதம் ஒரு செல்பி வீடியோ ஒன்றை அதிரடியாக வெளியிட்டார். 

அந்த வீடியோவில் பேசிய மலர், அவர் வேலை பார்க்கும் அந்த டைல்ஸ் கடைக்குள் நின்றபடி, அந்த கடையின் உரிமையாளர் நவநீதன் முன்பு செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார்.

அப்போது, அந்த வீடியோவில் பேசிய அந்த பெண், “என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய பார்க்கிறார்கள் என்றும், எனது முதலாளி என்னை இதுவரை 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார்” என்றும், அந்த வீடியோவில், அந்த பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். 

குறிப்பாக, “என் கடை முதலாளி நவநீதன், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, அவரது மனைவிக்கும் தெரியும்” என்றும், அவர் அந்த வீடியோவில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, கடும் ஆத்திரமடைந்த அந்த முதலாளி நவநீதன், அந்த பெண் மலரை கடுமையாக தாக்கி, அவரிடம் இருந்து அந்த செல்போனையும் பறிக்க முயல்கிறார். இப்படியாக, அந்த வீடியோ முடிகிறது. இதனையடுத்து, அந்த வீடியோ, அந்த பகுதி முழுவதும் இணையத்தில் பரவியது.

இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் தான், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, நவநீதனின் வீட்டிலிருந்து உதவி கேட்டு போனில் அழைப்பு வந்திருக்கிறது. இதனை நம்பி அந்த பெண் மலர், கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டிற்கு சென்று உள்ளார். 

ஆனால், அந்த பெண் அந்த வீட்டின் உள்ளே சென்ற அடுத்த சிறிது நேரத்தில், மலரின் அலறல் சத்தம் வீட்டின் உள்ளிருந்து வெளியே கேட்டிருக்கிறது. 

அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு அந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண் மலர் தீயில் எரிந்த நிலையில் அலறிக் துடிததுக்கொண்டு இருந்தார். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அந்த மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொட்பாக விரைந்து வந்த போலீசார், தற்கொலை வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். 

ஆனால், “மலரை, அவரது முதலாளி குடும்பத்தினர் கொலை செய்ய முயன்றதாக” மலரின் குடும்பத்தினர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். 
குறிப்பாக, “நவநீதனின் மனைவி அகிலா, எங்கள் மகள் மலர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தார்” என்றும், அவர்கள் பகிரங்மாக குற்றம்சாட்டினர்.

முக்கியமாக, மலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியது. அதில், “வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்ற என்னை, எனது குடும்ப சூழலை பயன்படுத்தி, நவநீதன் பல முறை என்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாக” குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், “எனது சாவுக்கு நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாதான் காரணம் என்றும், என்னைப் போன்ற அப்பாவிப் பெண்கள், நவநீதன் போன்ற முதலாளிகளிடம் சிக்கி வாழ்வை இழக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த கடிதத்தை நான் எழுதுவதாகவும்” மலர் குறிப்பிட்டு ஈரந்தார்.

இந்த நிலையில் தான், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மலர், முன்னதாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலர் இறப்புக்கு காரணமான டைல்ஸ் கடை உரிமையாளர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காததால் “உயிரிழந்த மலரின் உடலை வாங்க மாட்டோம்” என்று, அவரது உறவினர்கள் கூறி போராட்டம் நடத்தப்போவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்தே, மலர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், கடையின் உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா மீது போலீசார் தற்போது கொலை வழக்கு பதிவு செய்த உள்ளனர்.

மேலும், தற்போது தலைமறைவாக உள்ள நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.