இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல்,பிகில் என்று படங்களை இயக்கினார் அட்லீ.

மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்கள் நடைபெற்று பின்னர் சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இந்த படத்தின் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.இவரை தவிர ப்ரியாமணி,யோகி பாபு, Sanya Malhotra,Sunil Grover உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு ஜவான் என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் ஜூன் 2 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.படம் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.