காதலனை நம்பி வந்த சிறுமி.. ரூமிற்குள் காதலனுடன் 6 பேர் காத்திருந்த பயங்கரம்!

காதலனை நம்பி வந்த சிறுமி.. ரூமிற்குள் காதலனுடன் 6 பேர் காத்திருந்த பயங்கரம்! - Daily news

காதலனை நம்பி தனியாக வந்த சிறுமியை, காதலன் உட்பட அவனது நண்பர்கள் 6 சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் அந்த சிறுமியை காதலிப்பதாகச் சொல்லி, பல நாட்களாக பின் தொடர்ந்துச் சென்று, தனது காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறான்.

இதனால், அந்த சிறுவன் மீது, அந்த 15 வயது சிறுமியும் காதல் வயப்பட்டிருக்கிறாள். இதனையடுத்து, ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த 14 ஆம் தேதி அன்று தனது காதலியை வீட்டிற்கு வருமாறு அந்த காதலன் அழைத்திருக்கிறான்.

அப்போது, அந்த 15 வயது சிறுமியும் அந்த காதலனை நம்பி, ஆசையாக அவனது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ஆனால், அந்த சிறுமி காதலன் வீட்டிற்குள் சென்றதும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். அதற்கு காரணம், அந்த வீட்டின் உள்ளே, காதலன் மட்டுமல்லாது, அந்த காதலனின் நண்பர்கள் 6 பேர் இருந்திருக்கிறார்கள். 

அப்போது, கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சூழல் சரியில்லை என்று நினைத்து, அங்கிருந்து தப்பிக்க நினைத்திருக்கிறார். ஆனால், அதற்குள் அந்த வெறிப்பிடித்தவர்கள், அந்த சிறுமியை வீட்டின் உள்ளே இழுத்துப் போட்டு, அந்த வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அந்த சிறுமியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இப்படியாக, அந்த 7 பேரும் அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொடூரத்தின் உச்சமாக இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரத்தை, அவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளனர். 

குறிப்பாக, அந்த வெறிப்பிடித்த 7 பேர் கொண்ட மிருகங்கள், அந்த சிறுமியை 2 நாட்களாக வைத்து வெறித்தீர மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, அந்த பெண்ணை மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால், உன்னை கொன்று விடுவோம்” என்று, பயங்கரமாக மிரட்டி அந்த சிறுமியை அனுப்பி உள்ளனர்.

இதனால், 2 நாளுக்குப் பிறகு வீடு திரும்பிய சிறுமியிடம் “2 நாட்களாக எங்கே சென்றாய்?” என்று கேட்டு உள்ளனர். இதனால், பயத்து போன அந்த சிறுமி, இது குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லாமல், தனது பெற்றோரிடம் மாறி மாறி பொய் சொல்லி உள்ளார்.

பின்னர், அடுத்த 2 நாட்கள் சென்ற நிலையில், அந்த 7 பேரும் சிறுமியின் உறவினர்களிடம் அந்த வீடியோவை காட்டி “ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்” என்று, மிரட்டி இருக்கிறார்கள். 

அப்போது தான், தங்கள் மகளுக்கு ஏற்பட்ட இந்த பயங்கர கொடூரம் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த ஏழு காம மிருகங்களையும் அதிரடியாக கைது செய்தனர். 

இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அந்த 7 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. எனினும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment