தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்குமார் நடித்து கடைசியாக வெளிவந்தவலிமை  திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் தயாராகி வருகிறது #AK61 திரைப்படம்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார்-போனி கபூர்-H.வினோத் மற்றும் நீரவ்ஷா கூட்டணியில் தயாராகி வரும் #AK61 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக #AK61 திரைப்படத்திற்காக செம ஸ்டைலான கெட்டப்பில் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வமுள்ள அஜித் குமார் தற்போது மீண்டும் பைக் ரைடிங்கில் ஈடுபட்டுள்ள புதிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…

 

Ride like AKing 🛣️#AK #AK61 #AK62 #AjithKumar pic.twitter.com/AVVqNG510p

— Galatta Media (@galattadotcom) June 18, 2022

#AK 's motorcycle diaries 🚏🛣️#Ajithkumar𓃵 #AK61 #AK62 pic.twitter.com/q9RAHH4iPY

— Galatta Media (@galattadotcom) June 18, 2022