RRR படத்தின் பாடல்கள் செய்த பெரிய சாதனை !
By Aravind Selvam | Galatta | June 18, 2022 18:48 PM IST
தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்துள்ளனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார்.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகவுள்ளது.ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.மிக பிரம்மாண்டமாக இந்த படம் மார்ச் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படம் 1100 கோடியை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தின் பாடல்கள் தற்போது அனைத்து மொழிகளையும் சேர்த்து 600 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#RRRMovie songs strikes 600Million+ views across all languages on youtube 🔥🌊
— Lahari Music (@LahariMusic) April 16, 2022
▶️ https://t.co/Poy177ThAr
An @mmkeeravaani musical
Audio on @LahariMusic @TSeries @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @OliviaMorris891 @DVVMovies @RRRMovie #RRR pic.twitter.com/e7BGExa1nt
"Don't expect KGF, RRR, or Vikram from my movie", this star director reveals!
07/06/2022 02:38 PM
RRR makes another world record yet again - find out here!
02/06/2022 07:16 PM