மழையினால் மக்களுக்கு அதிக விலைக்கு பால் விற்றால் பால் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

nasarதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அதன்படி மழையின் காரணமாக பால் கொள்முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
பால் கொள்முதல் வழித்தட வாகனங்கள் சங்கங்களில் பாலை எவ்வித தடையுமின்றி சேகரம் செய்வதையும் முறையாக இயங்குவதையும் கண்காணிக்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.