விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 5 வாரங்கள் நிறைவடைந்து தற்போது 13 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. இந்த வார தொடக்கத்தில் கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற அபிநய்  இடமிருந்து தனது நாணயத்தை பயன்படுத்தி கேப்டன் பதவியை தட்டிப்பறித்த இசைவாணி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற நாமினேஷனில் ராஜு, அபிநய், அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவனி, நிரூப், வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் தொடங்கப்பட்டு அனல் பறக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் பாவனியின் ஆகாயம் நாணயத்தின் வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கு பல அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. லிவிங் ஏரியா முழுவதும் பாவனியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கே யார் நுழைவதாக இருந்தாலும் பாவனி தரும் டாஸ்க்கை செய்த பிறகே நுழைய வேண்டும் அப்படி இல்லையேல் தண்டனை வழங்கப்படும் என்பது விதிமுறை.

இந்த விதிமுறையை நிரூப் மீற அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நிரூப் தண்டனையை ஏற்க மறுக்க அனைவருக்கும் லிவிங் ஏரியாவில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நீருப் பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் காரசாரமான விவாதத்தில் ஈடுபடும் அனல் பறக்கும் ப்ரோமோ சற்று முன் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ...