தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் இணைந்து நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்களுக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் முதல் தளபதி 67 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பிரபல நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரியோ ராஜ் அடுத்த கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் Dr.D.அருளானந்து தனது முதல் படமாக தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்குகிறார்.

ரியோ ராஜுடன் இணைந்து பவ்யாத்திரிகா, மாளவிகா மனோஜ், விக்னேஷ் கண்ணா, கெவின் ஃபெல்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு சித்து குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 30) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
 

 

In Presence of Lokesh Kanagaraj at the pooja , Vision Cinema House Dr.D.Arulanandhu's proudly presents
Rio Raj In Production No 1 Shooting Starts from Today ✨

Produced by@vchproduction@RichIndiaonline@ThisIsMathewo#VCH #visioncinemahouse #productionno1 #rioraj3 pic.twitter.com/EJGYGNOROK

— Vision Cinema House (@vchproduction) October 30, 2022