விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். மேலும் வைல்டு கார்டு என்டியாக பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியும் போட்டியாளராக களமிறங்கினார்.

கடந்த பல சீசன்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிக் டாக் மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து, பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஆரம்பம் முதலில் தனது எதார்த்தமான நடவடிக்கைகளால் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்த GP.முத்து முதல் இரண்டு வாரத்திலேயே தனது குழந்தைகளை காண விரும்பி பிக் பாஸ் வீட்டில் இருந்து தானாக வெளியேறினார்.

GP.முத்து தானாக முன்வந்து வெளியேறியதை தொடர்ந்து முதல் எலிமினேஷனில் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து மூன்றாவது வாரம் மிகவும் பரபரப்பாகவும் காரசாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. பொம்மை டாஸ்க்கில் போட்டியாளர்களிடையே அனல் பறந்தது.

ஷெரினா கீழே விழ, தனலட்சுமி தான் காரணம் என ஒரு குழுவினர் பொங்க, நேற்று அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற எபிசோடில் கமல்ஹாசன் குறும்படம் போட்டு உண்மையை வெளிப்படுத்தினார். வழக்கம்போல் அல்லாமல் இந்த வாரம் அசீமை கமல்ஹாசன் மிகக் கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் இந்த வார EVICTION RESULT தற்போது வெளியாகியுள்ளது. அசல் கோலார் இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் EVICT-ஆகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.