சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் சில மாதங்களுக்கு முன் நிறைவுக்கு வந்தது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் டிவியில் ப்ரின்ஸ் படத்திற்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் விஜய் டிவியின் காமெடி நட்சத்திரம் ராமர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார்.இவர்களது காம்பினேஷனை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.