தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்திலிருந்து தனது புதிய வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளார். மாநாடு திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2-வது பாகமும் விரைவில் தயாராகும் என பட குழுவினர் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்கான பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுவதாகவும் இதில் நடிகர் சிலம்பரசன்.TR அட்டகாசமாக நடனம் ஆடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன்.TR இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார். ட்ரெண்டாகும் சிலம்பரசன்.TR-ன் புகைப்படம் இதோ…

 

Our Energetic #AGR burning the floor with his inspirational dance. Filming now for #pathuthala @SilambarasanTR_⁩ ⁦@StudioGreen2⁩ ⁦@kegvraja⁩ ⁦@arrahman⁩ ⁦@NehaGnanavel⁩ ⁦@Gautham_Karthik⁩ ⁦@iamSandy_Off⁩ ⁦@PenMovies⁩ ⁦⁦ pic.twitter.com/VoR34At0WI

— Obeli.N.Krishna (@nameis_krishna) October 29, 2022